கர்நாடகத்தில் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி அல்ல என்று சிபிஎம் தலைவர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த சட்டப்பேரவை தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறியது: 2008-ஆம் ஆண்டில் அமைந்த பாஜக அரசு, ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள வேறுகட்சியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சிக்கு இழுத்தது. 5 ஆண்டுகால பாஜக ஆட்சி ஊழல் நிறைந்ததாக இருந்தது. ஊழல்களில் சிக்கி முதல்வர், அமைச்சர் பதவிவகித்தவர்கள் சிறைக்கும் சென்றுதிரும்பினர். சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்ட சுரண்டல்வாதிகள்(ரெட்டி சகோதரர்கள்) பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இனி எந்தகாலத்திலும் கர்நாடகத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடியாது. அப்படியானால், அதற்கு மாற்றாக விளங்கும் காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களுக்கு ஏற்ற கட்சி அல்ல. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு, மாநில பாஜக அரசுக்கு சளைத்ததல்ல. மாநிலத்தில் பாஜக ஊழல் ஆட்சி நடத்தினால், மத்தியில் காங்கிரஸ் ஊழல் ஆட்சி நடத்திவருகிறது. பாஜக அரசை போல, இந்தியாமுழுவதும் இயற்கைவளங்களை சுரண்டுவதற்கு தன்னுடைய தவறான கொள்கையால் மத்திய காங்கிரஸ் அரசு துணைபோயுள்ளது. கர்நாடகமக்களை பற்றிகவலைப்படாமல் இருப்பதில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது. கர்நாடகத்தில் மாற்று அரசியல்வழங்கும் கட்சிகள் இல்லை. எனவே, மக்கள் நலன் சார்ந்த மாற்றுகொள்கைகளை முன்வைப்பதற்கு சட்டப்பேரவையில் இடம்பெற இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இடதுசாரி கட்சிகளின்வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கர்நாடக மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

