விழுப்புரத்தில், "மிஸ் கூவாகம் 2013' போட்டிகள் ஏப்ரல் 22-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று சமுதாய மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் சலீமா தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி ஒன்பது திருநங்கைகள் அமைப்பைச் சேர்ந்த நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
திருநங்கைகளை வரவேற்கும் விதமாக வரவேற்பு வளைவுகள் ஏப்ரல் 22-ம் தேதி காலை திறந்து வைக்கப்படுகிறது. இதனை நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் திறந்து வைக்கிறார். காலை 10.30 மணிக்கு திருநங்கைகளுக்கான பட்டிமன்றங்கள் நடைபெறுகிறது. மாலை 6 மணி அளவில் மிஸ் கூவாகம் 2013 போட்டிகள், விழுப்புரத்தில் நடைபெறும். இப் போட்டிகளை ஆட்சியர் வா.சம்பத் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

