பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டு உளவு துறைக்கு தெரிவித்ததாக கடந்த 1990-ம் ஆண்டு ஜோத்பூரில் முகமது சபி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை பறிமாறியது உள்பட பல்வேறு பிரிவுகளின் முகமது சபி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் முகமது மனு செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்திலும் மனு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.கே. பிரசாத், வி.கோபால கௌடா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
அரசுத் தரப்பு சாட்சியங்களை பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முகமது சபியிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. எதற்காக இந்த ஆவணங்களை அவர் வைத்திருந்தார் என தெளிவாக விளக்கவில்லை.போலீஸார் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டனர் என அவர் கூறுவதை ஏற்க முடியாது. சோதனை உத்தரவை போலீஸார் பெறாவிட்டாலும், அவரது வீட்டில் தான் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வழக்கில் கீழ் நீதிமன்றம் மிகச் சரியான முறையில் தான் தீர்ப்பு அளித்துள்ளது எனக்கூறி முகமது சபியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

