சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடிநீர்ப் பஞ்சத்தை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை: கருணாநிதி

காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற நதிகள் எல்லாம் மணல் திட்டுகளாகி விட்டன. மழை பெய்யாத நிலையில், மழை பெய்தபோது கிடைத்த நீரை பக்குவமாகச் சேர்த்து வைக்கும் பணியிலே அரசு அக்கறை காட்டவில்லை.ஆறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் கடலோரமாவட்டங்களில் உள்ள நன்னீர்

Updated On :22 ஏப்ரல் 2013, 12:51 am

சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. அரசு குடிநீர்ப் பஞ்சத்தை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குடிநீர்த் திட்டங்களை 110வது விதியின் கீழ் அறிவிப்பதிலேயே காலத்தைச் செலுத்தி வருகிறது. என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற நதிகள் எல்லாம் மணல் திட்டுகளாகி விட்டன. மழை பெய்யாத நிலையில், மழை பெய்தபோது கிடைத்த நீரை பக்குவமாகச் சேர்த்து வைக்கும் பணியிலே அரசு அக்கறை காட்டவில்லை.ஆறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் கடலோரமாவட்டங்களில் உள்ள நன்னீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்குப் பயனற்றதாக ஆகிவிட்டது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை, மாநகரின் குடிநீர்த் தேவைக்கான செங்குன்றம்,சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். ஆனால் இந்த நீர்த் தேக்கங்களில் சுமார் 10 அடி வரை சேறும் வண்டல் மண்ணும் நிற்கிறது.இதனால் ஏரியின் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரைத் தேக்க இயலவில்லை.அதேபோல கண்டலேறுவிலிருந்து கிருஷ்ணா கால்வாயில்; வாய்க்கால் சீரமைக்கப்படாததால் வரும் நீர் வீணாகி ஆந்திராவில் உள்ள வயல்களிலும், வாய்க்கால்களிலும் தேங்கி விடுகிறது.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கல் துறை சார்பில் நாள் ஒன்றுக்கு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 766 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீட்டு உபயோகத்திற்காகவும், 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் மொத்த நுகர்வோர்களுக்கும், 37 மில்லியன் லிட்டர்தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுகிறது. இதைத் தவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகள் மற்றும் போர்வெல்களிலே இருந்து தண்ணீரைக் கொண்டு வந்துநகரிலே தனியார் லாரி உரிமையாளர்கள் பெரிய ஓட்டல்களுக்கெல்லாம் விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லோடு நகரிலே விற்பனை ஆவதாகவும், போகப போக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.கிராமங்களிலே “தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள். ஆனால் இந்த ஆட்சியினர் அவ்வாறு வாலைப் பிடிக்கவும் முயற்சி செய்யாமல் காலத்தைக் கடத்தி விட்டார்கள்.தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பதைப் பற்றி முன்கூட்டியே கணித்து, வருமுன் காத்திடவேண்டிய அ.தி.மு.க. அரசு, தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கு முன் காத்திடத் தவறி விட்டது.தண்ணீர்ப் பஞ்சம் தற்போது வந்ததற்குப் பின்னரும், அதிலிருந்து மக்களைக் காத்திடும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அதிகாரிகளை அழைத்துப் பேசுவதாக புகைப்படங்களை வெளியிட்டு,அன்றாடம் ஒன்றிரண்டு 110 அறிவிப்புகளைப் பேரவையிலே படித்து விட்டு,ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும், விளம்பர உத்திகளிலும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறது என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.