வளர்ந்த நாடுகள் பொருளாதார தடைகளை நீக்கினால், உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சர்வதேச செலாவணி நிதியமைப்பின் (ஐ.எம்.எஃப்.) சார்பில் வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்திர நிதிக் குழு கூட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வந்த சர்வதேச பொருளாதார நிலை இப்போது முன்னேற்றப் பாதைக்குத் திரும்பி உள்ளது. பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.இத்தகைய நிச்சயமற்ற தன்மை நிலவியபோதிலும், கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை மற்றும் பொருளாதாரத் தடைகளை வளர்ந்த நாடுகள் நீக்கினால், சர்வதேச பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக இந்தியப் பொருளாதாரமும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுதவிர சில உள்நாட்டு காரணிகளும் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணமாக அமைந்தன. இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கும், முதலீட்டை அதிகரிப்பதற்கும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட மெகா திட்டங்களுக்கான தடைகளைக் களையவும், அவற்றுக்கு விரைவாக ஒப்புதல் கிடைக்கவும் மத்திய அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடி தேவைப்படுகிறது.மானியம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க "உங்கள் பணம், உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.
வரி விதிப்பு முறையை மறுசீரமைக்கும் வகையில், புதிய வரிக் கொள்கை மற்றும் சரக்கு மற்றும் சேவைகள் வரியை செயல்படுத்துவதற்கும் உரிய சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பலன் கிடைத்துள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையை குறைக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

