ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் சௌதாலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் 3206 ஆசிரியர்கள் நியமக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இவ்வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த தில்லி நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஓ.பி.சௌதாலா, அவரது மகன்கள் அஜய், அபய் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதன்படி அனைவரும் திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மனுராய் சேத்தி முன்னிலையில் நடைபெற்றது.அப்போது தான் முன்னாள் முதல்வர் சௌதாலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி சேத்தி, மருத்துவமனையில் சௌதாலா சேர்க்கப்பட்டது குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் சௌதாலாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை திகார் சிறைக்கண்காணிப்பாளர் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து வரும் 12-ம் தேதி மீண்டும் சௌதாலாவை ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

