சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்டெர்லைட் ஆலை குறித்த தமிழக அரசின் கருத்து: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை பற்றி தமிழக அரசு கூறிய கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On :1 ஏப்ரல் 2013, 4:55 pm

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை பற்றி தமிழக அரசு கூறிய கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது குறித்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று உச்சநீதிமன்ற விசாரணையின் போது அறிவித்தது. ஆனால், இந்த கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், புதிய அறிக்கையை ஏற்க முடியாது. இதுபோன்ற எந்த நடவடிக்கைகளும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.