காஞ்சிபுரம் மாவட்டம் ஈச்சந்தாங்கல் அருகே உள்ள கலக்காத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மனைவி இந்திரா. இவர் தனது மகன் சக்திவேலுக்கு வேலை வாங்கி தரும்படி,வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே அகரம் கிராமத்தில் உள்ள கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் நாகேந்திரனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நாகேந்திரன் சக்திவேலுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்காக இந்திராவிடம் ரூ.5 லட்சம் பணமும் பெற்றதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற சில நாட்களிலேயே நாகேந்திரன் விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணை ஒன்றை கொடுத்ததாகவும், அதை சக்திவேல் விமான நிலைய அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது தான் அந்த ஆணை போலியானது என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்திரா, நாகேந்திரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு நாகேந்திரன் பணத்தை தருகிறேன் என கூறி பணத்தை திருப்பி கொடுக்காமல் தாமதித்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக இந்திரா வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனை சந்தித்து புகார் தெரிவித்தார். பின்னர் கலவை போலீசிலும் புகார் கொடுத்தார். அதன் பேரில் கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து போஸ்ட் மாஸ்டர் நாகேந்திரன் (எ) தனசேகரை கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

