ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாணின் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆதர்ஷ் குடியிருப்பு வளாக ஊழல் தொடர்பாக, தம் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என சவாண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் உள்நோக்கத்துடன் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், இந்த வழக்கை விசாரிப்பதற்கு சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் அல்லது மகாராஷ்டிர அரசு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
அசோக் சவாண் முதல்வராக இருந்தபோது, ஆதர்ஷ் சங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்குப் பிரதிபலனாக, சவாண் உறவினர்களுக்கு ஆதரஷ் குடியிருப்பு வளாகத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் கார்கில் போர் வீரர்களுக்காகவே கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு வளாகத்தில் 40 சதவீதத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய சவாண் அனுமதி அளித்துள்ளார். இந்த ஊழலில் சவாணுக்கு முக்கிய பங்கு உள்ளதால் அவரை விடுவிக்கக் கூடாது.மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் விசாரணை நடத்தி வருகிறோம் என சி.பி.ஐ. தனது பதில் மனுவில் கூறியுள்ளது.ஆனால், மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இந்த வழக்கை விசாரிக் சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ் மற்றும் ஏ.ஆர். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக மற்ற அமர்வுகள் வழங்கிய உத்தரவு மற்றும் பதில் மனுக்களின் நகலை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அடுத்த விசாரணையை 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

