தில்லியில் உள்ள திகார் சிறையில் இன்று காலை மரணம் அடைந்த பாலியல் பலாத்கார குற்றவாளி ராம் சிங்கின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திகார் சிறையில் இருந்த ராம் சிங் இன்று காலை தான் அணிந்திருந்த துணியால், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், ராம் சிங் தற்கொலை செய்து கொள்ளும் போது, அந்த அறையில், அவனுடன் மற்றொரு குற்றவாளியும் இருந்துள்ளார். அதே சமயம், ராம் சிங் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால், அவனது சிறை அறைக்கு என தனி அதிகாரியும் உள்ளார்.
இந்த நிலையில், ராம் சிங் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தற்போது ராம் சிங்கின் உடல் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறை அறையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

