சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிலம் கையகப்படுத்துதல் மசோதா: 7இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பான கருத்து வேறுபாடுகளில் சமரசம் காணும் வகையில் வரும் 7ஆம்

Updated On :2 மார்ச் 2013, 10:21 am

நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பான கருத்து வேறுபாடுகளில் சமரசம் காணும் வகையில் வரும் 7ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா கொண்டுவரப்பட்டது. இம்மசோதாவில், நிலத்தை இழக்கும் உரிமையாளர்களுக்கு இழப்பீடு மற்றும் மறு வாழ்வுக்கான நிதி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. வாசுதேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இம்மசோதா மீதான பரிந்துரை மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குச் செல்வதை அரசு விரும்பவில்லை. எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சமரசம் காண திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் வரும் 7ஆம் தேதி, இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.