சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ.3 கோடி வங்கி மோசடி வழக்கில் 2 பேர் கைது

சந்தீப் சிங் அத்வல் (32) மற்றும் அவரது மனைவி ரமஞ்சீத் கௌர் (29) ஆகிய 2 பேரும் இணைந்து ஆர்.எஸ். என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினர். பாங்க்

Updated On :2 மார்ச் 2013, 2:21 am

ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கிக் கிளை ஒன்றில் ரூ.3.13 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து கோடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரபுல்ல குமார் கூறியதாவது:

சந்தீப் சிங் அத்வல் (32) மற்றும் அவரது மனைவி ரமஞ்சீத் கௌர் (29) ஆகிய 2 பேரும் இணைந்து ஆர்.எஸ். என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினர். பாங்க் ஆப் பரோடா வங்கியின் ராம்புரா கிளையில் இருவரும் தலா ரூ.26.5 லட்சம் கடன் வாங்கினர். பின்னர், அதே வங்கியில் வீட்டு மனையின் பேரில் அத்வல் மேலும் ரூ.2.6 கோடி கடன் வாங்கி உள்ளார். ஆனால் அந்த மனை 8 ஆண்டுகளுக்கு முன்பே விற்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக அத்வலின் தந்தை அஜீத் சிங் மற்றும் அவரது உறவினர் ரகுவீர் சிங் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளான அத்வல் மற்றும் ரமஞ்சீத் ஆகிய 2 பேரை தேடி வருகிறோம் என்று கூறினார்.