தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறையின் பணியை செம்மைப்படுத்தவும் அவ்வபோது அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தமிழக காவல்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.பி.கள் மொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதன் பின்னர் மொத்தமாக டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்படப்படாமல் இருந்தனர். சில டி.எஸ்.பி.கள் அவர்கள் விருப்பத்தின் பேரிலும், பணி ஒழுங்கீனத்தின் காரணமாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 50 டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. கே.ராமானுஜம் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை தவிர மீதி அனைத்துப் பகுதிகளிலும் இந்த டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த டி.எஸ்.பி.கள் ஒரே பதவியில் பல ஆண்டுகளாக பணி புரிந்தவர்களாக இருப்பதாலும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகார் அடிப்படையிலும் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

