கோவை துடியலூரை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வீராச்சாமி(46) என்பவர் கோவை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு பிரிவில் அதிகரியாக பணியாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் இவரை தொடர்பு கொண்ட நபர் தன் பெயர் சரவணக்குமார் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரி என்றும், நீங்கள் லஞ்சம் வாங்கி வீடு கட்டி வருவருவதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 லட்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.சந்தேகம் அடைந்த வீராசாமி கோவை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.அதற்கு அவர்கள் தங்கள் அலுவலுகத்தில் அப்படி யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
உஷாரான வீராச்சாமி சரவணக்குமாரை பிடிக்க முடிவு செய்து தான் பணத்தை தயார் செய்துவிட்டதாக சரவணக்குமாரிடம் கூறினார்.உடனே சரவணக்குமார் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு வீராச்சாமியை வரச்சொன்னார்.பின்னர் வீராச்சாமி பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சரவணக்குமாரை பிடித்தனர். விசாரணையில் சரவணக்குமார் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்தது தெரிய வந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

