சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 23 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.4.2 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஈஞம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் வியாழக்கிழமை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் நடந்து சென்றுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தையும், நகையையும் பறித்துச் சென்றாராம்.இதற்கிடையே அங்கு ரோந்து வந்த போலீஸார், ராஜா வழிப்பறி குறித்து தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், சேலையூர் காந்திநகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராடு கண்ணன் (30) என்பது தெரியவந்தது.
போலீஸார் அவரிடம் பல கட்டங்களாக விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் துரைப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் ஆகியோரை குறி வைத்து சுமார் 23 வழிப்பறிகளில் கண்ணன் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.4.2 லட்சம் மதிப்புள்ள திருட்டு தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு வேறு எந்த வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

