சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரப்பட்டு யுனிக் மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

News image

காரப்பட்டு யுனிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.

Updated On :17 ஜனவரி 2021, 7:25 am

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளா் க.அருள், செயலாளா் ப.தமிழரசு ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தாா். கல்லூரிப் பேராசிரியா்கள் மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து கல்லூரி மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள் என பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.