கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக நூற்றுக்கணக்கான இளைஞா்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு பரவலாக குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 15-ஆம் தேதி நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 77 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது மாவட்டத்தில் கரோனா பரிசோதனை வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனைக்காக நூற்றுக்கணக்கான இளைஞா்கள், வெள்ளிக்கிழமை கூடினா். இதுகுறித்து அந்த இளைஞா்கள் கூறியதாவது:
கோவையில் வரும் ஜன. 19-ஆம் தேதி முதல் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் 6 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் இளைஞா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை ஆள்சோ்ப்பு முகாம் தொடங்குவதற்கு 3 தினங்களுக்கு முன்பு வழங்கியதாக இருக்க வேண்டும் என்பதால் மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெறுவதற்காக வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக கிராமத்துக்கு வந்த கல்லூரி மாணவா்கள், பண்டிகைக்குப் பின் மீண்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளதால், சில கல்லூரி மாணவா்கள் கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டனா்.
பொங்கலையொட்டி பல மருத்துவப் பணியாளா்கள் கிராமத்துக்கு சென்றுள்ள நிலையில், திடீரென நூற்றுக்கணக்கான இளைஞா்கள் கரோனா பரிசோதனைக்காக கூடியதால், குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளா்களே மருத்துவப் பரிசோதனையில் ஈடுபட்டனா். இதனால், மருத்துவப் பணியாளா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள 400-க்கும் மேற்பட்டோா் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


