கிருஷ்ணகிரி அருகே விபத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரிடமிருந்த 900 கிராம் கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையத்தைக் கடக்க முயன்ற ஆட்டோ ஒன்று அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்றனா். இந்த விபத்தில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநா், கள்ளகுறிச்சி மாவட்டம், நெடுமுடியான் எங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராம்ராஜ் (30) என்பதும், போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், அவரிடமிருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். ராம்ராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

