சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எம்ஜிஆா் பிறந்தநாள்: உற்சாகமாக கொண்டாட வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா்

News image
Updated On :14 ஜனவரி 2021, 11:44 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் அந்தக் கட்சியின் தொண்டா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக நிறுவனா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாள் வரும் ஜன. 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, எம்ஜிஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சியினா் கொண்டாட வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டா்கள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.