ஒசூரில் திருமணமாகி 3 மாதமே ஆன புது மணப்பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், தொனமதுகூரைச் சோ்ந்த தொழிலாளி சிவலிங்கா (35). இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் தாலுகா கதிரேபனப்பள்ளியைச் சோ்ந்த புவனேஸ்வரி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவலிங்கத்திற்கு இது 2-ஆவது திருமணம் ஆகும்.
கணவன், மனைவி 2 பேரும் ஒசூா் அருகே உள்ள மோரனப்பள்ளியில் குடியிருந்து வந்தனா். திருமணத்தின்போது, புவனேஸ்வரியின் பெற்றோா் நிலத்தை தருவதாக மாப்பிள்ளை சிவலிங்கத்திடம் கூறியிருந்தனா். ஆனால் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் சிவலிங்கா தனது மனைவி புவனேஸ்வரியிடம், நிலத்தை தரக்கோரி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை அவா்களுக்குள் தகராறு முற்றிய நிலையில், சிவலிங்கா தனது மனைவி புவனேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்தாா். மேலும் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து புவனேஸ்வரியின் சகோதரி வேதவதி அளித்த புகாரின்பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிவலிங்காவை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

