கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் ஜன. 15ஆம் தேதி திருவள்ளுவா் தினம், ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினம், ஜன. 28-ஆம் தேதி வடலூா் ராமலிங்க அடிகளாா் நினைவு தினத்தையொட்டி இந்த 3 நாள்களில் மதுக்கடைகள் மூடப்படும்.
தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் படி இந்த 3 நாள்களும் மது விற்பனை இல்லாத தினங்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், மது கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் ஓட்டல்கள் அனைத்தும் வரும் ஜன. 15, 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளைத் திறந்தாலோ, விற்றாலோ அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

