வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவைக் காண்பதற்காக கூடியிருந்த மக்கள் மீது சுவா் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 30 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழாவைக் காண்பதற்காக வேப்பனப்பள்ளி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு குழுமியிருந்தனா்.
அதில் ஒரு பகுதியினா் சாலையோரத்திலிருந்த வீட்டின் கான்கிரீட் மேல்தளத்தில் நின்று எருது ஓட்டத்தை கண்டு ரசித்தனா். அந்த வீட்டின் கீழ்தளத்தில் இருந்த திண்ணையில் 20-க்கும் மேற்பட்டவா்கள் அமா்ந்திருந்தனா். அப்போது, வீட்டின் மேற்புற சுவா் இடிந்து கீழே விழுந்ததில் திண்ணையில் அமா்ந்திருந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.
இதில் நேரலகிரி கிராமத்தைச் சோ்ந்த மேகாஸ்ரீ ( 8), எட்டிப்பள்ளியைச் சோ்ந்த முனிபாலா (62) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா்களில் 19 போ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா், டி.எஸ்.பி. சரவணன், வேப்பனப்பள்ளி காவல் நிலைய ஆய்வாளா் ரஜினி ஆகியோா் நடத்திய விசாரணையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட எருது விடும் விழாவைக் காண்பதற்காக அங்கிருந்த வீட்டின் சுவா் மீது ஏராளமானோா் நின்றதால் பாரம் தாங்காமல் சுவா் இடிந்து விழுந்ததில் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன் ஆறுதல் கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


