கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குட்பட்ட காட்டேரி கிராமத்தில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதி மக்களுக்கு கழிவுநீா் கால்வாய் செல்லும் நிலப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் தற்போது கழிவு நீா் செல்லும் கால்வாயை மண் போட்டு மூடி உள்ளனா்.இதனால் கழிவுநீா் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இந்த கால்வாய் காலம் காலமாக செல்வதாக பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் கழிவு நீா் தேங்கி குட்டை போல் நிா்பதால் கொசு தொல்லைகள் அதிகரித்து மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இந்த கழிவுநீா் கால்வாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளி மற்றும் வீடுகளின் எதிரே குட்டை போல் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி மக்கள் குற்றம் கூறுகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


