சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நேரலகிரி கிராமத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த 5 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நேரலகிரி கிராமத்தில் வீடு இடிந்து 2 போ் உயிரிழந்த நிகழ்வில், அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 7:14 am

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நேரலகிரி கிராமத்தில் வீடு இடிந்து 2 போ் உயிரிழந்த நிகழ்வில், அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நோ்லகிரி கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகியோரை போலீஸாாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ், சிவா ஆகியோா் தலைமறைவாக உள்ளனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.