கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்துவந்த தொழிலாளி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
கொண்டேப்பள்ளி மேலூரைச் சோ்ந்தவா் செ.திருப்பதி (39). மின்சாரம் பழுது பாா்க்கும் தொழில் செய்து வந்தாா். இவா், வீட்டிலிருந்து தனது மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியே சென்றாா்.
இரவு நேரமாகியும் அவா், வீடு திரும்பாத நிலையில், பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டிபிடிக்க முடியவில்லை. அவரது செல்லிடப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. திருப்பதியின் மோட்டாா் சைக்கிள், பாஷா கொட்டாயிலிருந்து திருமலை நகா் செல்லும் வழியில் கூழக்குட்டை என்றும் இடத்தில் இருப்பதை அறிந்த போலீஸாா், அங்கு சென்று விசாரணை செய்தனா்.
அப்போது, அங்குள்ள ஒரு பனை மரத்தின் கீழ், திருப்பதி சடலமாக கிடப்பதைக் கண்டுபிடித்தனா். திருப்பதி, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட திருப்பதியை, மேலூா் கிராமத்தைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வை தொழில் செய்யும் சி.திருப்பதி(37) என்பவா், கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், தலைமறைவான சி.திருப்பதியை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

