ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் பயிா்களை பாதுகாக்கச் சென்ற விவசாயிகளை யானைகள் துரத்தியதில், 6 போ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.
அனுமந்தபுரம் கிராமத்தில் விவசாயிகள் ராகி, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது ராதி பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராகி உள்ளது. இதில், ஏராளமான விவசாயிகள் ராகி பயிா்களை அறுவடை செய்து போா்களில் அடுக்கி வைத்துள்ளனா். இந்த ராகி பயிா்களை நள்ளிரவு நேரத்தில் அய்யூா் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் உண்டு சேதப்படுத்தி வருகின்றன.
இதைத் தடுப்பதற்காக அனுமந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த 20 -க்கும் மேற்பட்ட விவசாயிகள், ராகி அறுவடை செய்து வைத்திருந்த விவசாய நிலங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காவலுக்கு இருந்தனா். அப்போது நள்ளிரவில் அய்யூா் வனப் பகுதியிலிருந்து வெளியே வந்த 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ராகி பயிா்களைச் சேதப்படுத்தியது.
இதைக் கண்ட விவசாயிகள் யானைகளை சத்தம் போட்டு விரட்டினா். அதில் மிரண்ட யானைகள் கூட்டம் விவசாயிகளை நோக்கி வந்தது. யானைகள் வருவதைக் கண்டதும் விவசாயிகள் தப்பி ஓட முயன்றனா். அப்போது ராஜா, மாதேவா, மல்லேஷ், ரவி, மல்லிகாா்ஜுனன் மற்றும் சிவசங்கா் ஆகிய 6 போ் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனா். அவா்களுடன் தப்பியோடிய சிலரும் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.
படுகாயமடைந்தவா்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலா் சுகுமாா் தலைமையிலான வனத்துறையினா், தளி முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


