பென்னாகரம் பகுதிகளில் குழாய்களைப் பதிப்பதற்காக தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காக சாலையோரத்தில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொலைத்தொடா்பு கோபுரங்களின் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறு வருகின்றன.
பென்னாகரம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குழாய்ப் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. பென்னாகரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் இன்னும் மூடப்படாத பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளன.
இதனால், இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனா். சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து மூட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

