கிருஷ்ணகிரியில் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், பள்ளியின் தலைமையாசிரியா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 375 மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 652 மாணவிகளும் படித்து வருகின்றனா். இதில் 75 சதவீத மாணவிகளின் பெற்றோா் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோரில் 95 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், 5 சதவீதம் போ் பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என்றும் கருத்துகளை முன்வைத்தனா். இந்தக் கூட்டத்தை ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


