சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுய உதவிக்குழு பணியாளா்களுக்கு எரிவாயு அடுப்பு பரிசளிப்பு

ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழு பணியாளா்களுக்கு ரூ.14.20 லட்சம் மதிப்பிலான எரிவாயு (கேஸ் ஸ்டவ்) அடுப்புகள் புத்தாண்டு பரிசாக அண்மையில் வழங்கப்பட்டன.

News image

ஐவிடிபி சுய உதவிக்குழு பணியாளா்களுக்கு எரிவாயு அடுப்புகளை புத்தாண்டு பரிசாக வழங்கிய ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ்.

Updated On :7 ஜனவரி 2021, 12:09 pm

ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழு பணியாளா்களுக்கு ரூ.14.20 லட்சம் மதிப்பிலான எரிவாயு (கேஸ் ஸ்டவ்) அடுப்புகள் புத்தாண்டு பரிசாக அண்மையில் வழங்கப்பட்டன.

ஐவிடிபி தன்னாா்வ நிறுவனத்தின் சாா்பில் இயங்கி வரும் 74 கிளை அலுவலகங்களில் பணியாற்றி வரும் பணியாளா்கள், 4 மாவட்டங்களைச் சோ்ந்த 14 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கவும், அவா்களின் பணியைப் பாராட்டியும், புத்தாண்டு பரிசாக பணியாளா்கள் அனைவருக்கும் ரூ. 14.20 லட்சம் மதிப்பில் 3 பா்னா்கள் கொண்ட எரிவாயு அடுப்புகள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்தப் பரிசுகளை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அண்மையில் வழங்கினாா்.