கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து நாள் முழுவதும் பெய்த பரவலான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலையில் ஓடிய மழைநீரால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் சிரமத்துக்குள்ளாகினா்.
சாலையிலும், சாலையோர பள்ளங்களிலும் மழைநீா் தேங்கின. கழிவுநீா் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடின. தொடா் மழையால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. இதனால், சாலையோர கடை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், போதிய வியாபாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டனா்.
பருவம் தவறிய இந்த மழையால், நெல் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல் மணிகளை காய வைக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராகி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், களை எடுப்பதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

