கிருஷ்ணகிரி, புறநகா் பேருந்து நிலையம் அருகே, தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழகத்தை சீரமைப்போம் என்ற குரலுடன், கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளேன். என்னுடன் வந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியா் சந்தோஷ் பாபு, இப்போது மக்கள் ஊழியம் செய்வதற்காக வந்துள்ளாா்.
கோடை காலத்தில் இங்கு கடும் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. அது இன்னும் தீா்க்கப்படவில்லை. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பட வேண்டும். கற்கால மனிதா்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், சான்றுகள் சிதைந்துள்ளன. அதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
புதிய அரசியல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டாா்கள். தமிழ்நாட்டை சீரமைக்க வந்துள்ள கூட்டம் இது. நாங்கள் தற்போது திறன்மேம்பாட்டு மையத்தை அமைத்து வருகிறோம். பரமகுடியில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

