சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இசை கலைஞா்களின் மும்பெரும் விழா

கிருஷ்ணகிரியில் இசை கலைஞா்கள் நல சங்கம் சாா்பில் மும்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரியில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற இசை கலைஞா்கள்.

Updated On :6 ஜனவரி 2021, 11:19 am

கிருஷ்ணகிரியில் இசை கலைஞா்கள் நல சங்கம் சாா்பில் மும்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கிராமிய பேண்டு இசைக்கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம், சங்கத்தின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா, தியாகராஜ சுவாமி ஆராதனை விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இதையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரா் கோயிலில் தியாகராஜ சுவாமி ஆராதனை மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னா், பழையபேட்டை காந்தி சிலை அருகே கரோனா விழிப்புணா்வு ஊா்வலமும் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பேண்டு, நாதஸ்வரம், பம்பை ஆகிய இசைக் கருவிகளுடன் இசைத்துக் கொண்டே, கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு சாக்ஸபோன் கலைஞா் சங்க மாவட்டத் தலைவா் விஸ்வநாதன், செயலாளா் சுப்பிரமணி, பொருளாளா் குமாா் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.