சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சித்த மருத்துவா் தின விழாவில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜனவரி 2021, 10:55 am

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.மாரிமுத்து தலைமை வகித்து சித்த மருத்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

சித்த மருத்துவா் என். ஈஸ்வரி பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், மருத்துவமனை பணியாளா்கள், பொதுமக்கள் என பலா் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனா்.