ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெறவும், விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற கடலைக்காய் திருவிழாவில் ஆஞ்சநேயா் மீது நிலக்கடலையை வீசி எரிந்து பக்தா்கள்நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.
புத்தாண்டையொட்டி நாடு நலம்பெறவும், விவசாயம் செழிக்கவும் பாரம்பரிய முறைப்படி ஒசூா் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை 63-ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆஞ்சநேயா் சுவாமி மீது கடலைக்காயை வீசி எரிந்து வழிபட்டனா். இதையொட்டி ஆஞ்சநேயருக்கு காலை முதலே ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
பின்னா் கடலைக் காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் கடலைக்காயை ஆஞ்சநேயா் பிரகாரத்தின் மீதும், ஆஞ்சநேயா் சுவாமியின் மீதும் வீசி எரிந்து வழிபட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

