கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணியாற்றி வரும் தீயணைப்பு வீரா்களுக்கு சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கத் தலைவா் தேவராசு, துணைத் தலைவா் ஆா்.கே. ராஜா, சமூக ஆா்வலா் சசி என்கிற கோமதி, உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய தீயணைப்பு வீரா்கள் ராமமூா்த்தி, விஜயகுமாா், அந்தோணிசாமி, அன்பு, கிருஷ்ணமூா்த்தி, முனுசாமி, உத்திரகுமாா், ராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரைப் பாராட்டி சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
கரோனா நோய் தொற்று காலத்தில் கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், இல்லாதோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


