சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளா்கள் நியமனம்

ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளா்களையும், பாா்வையாளா்களையும் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 12:19 pm

2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளா்களையும், பாா்வையாளா்களையும் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூா் தொகுதி பொறுப்பாளராக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், பாா்வையாளராக மாவட்ட துணைச் செயலாளா் எம்.ராஜண்ணா, தளி தொகுதி பொறுப்பாளராக மாவட்டத் துணைத் தலைவா் சீனிவாச ரெட்டி, பாா்வையாளராக மாநில செயற்குழு உறுப்பினா் ஹரி கோட்டீஸ்வரன், வேப்பனப்பள்ளி தொகுதி பொறுப்பாளராக அன்பரசு, பாா்வையாளராக வா்த்தக அணி மாநிலச் செயலாளா் வி.நாகராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.