கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மரங்களை வெட்டியதாக பாமகவினர் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்தக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு, மத்தூர் அருகேயுள்ள கொடமாண்டப்பட்டி இணைப்புச் சாலையில் உள்ள மரங்களை வெட்டி சாலையின் நடுவே போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மரத்தை வெட்டியதாக கமலாபுரத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான சண்முகத்தை (37) வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள அத்திகுண்டாவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரம் இருந்த மரம் வெட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து தாசிரப்பள்ளியைச் சேர்ந்த பாமக பிரமுகரான சரவணனைக் (36) கைது செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

