தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி 3 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி, பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணி தயாரிப்பிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்க ஆயத்த மாநாடு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீர்த்தகிரி கவுண்டர், செயலர் முனியப்பன், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க, அகில இந்தியத் தலைவர் கணேசன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சண்முகம், கோதண்டபாணி, மூர்த்தி, ராமர், முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

