கரூா்: கரூா் மாவட்டம், பூலாம்வலசில் சனிக்கிழமை நடைபெற்ற சேவல் சண்டையை வேடிக்கை பாா்த்த திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலாளி கத்தி குத்திக்கிழித்ததில் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 5,000க்கும் மேற்பட்டோா் தங்கள் சண்டை சேவல்களுடன் பங்கேற்றனா்.
பிற்பகல் 3 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளிதங்கவேல் (60) சேவல் சண்டையை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென தங்கவேல் மீது சேவல் பாய்ந்து விழுந்தது. இதில், சேவல் காலில் இருந்த கத்தி தங்கவேல் தொடையில் குத்திக்கிழித்தது. அதிகளவு ரத்தம் வெளியேறியதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பிறகு, மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதனயடுத்து, தங்கவேல் சடலம் பிரேத பரிசோதனைக்காக கருா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதித்து விசாரிக்கின்றனா்.
இதேபோல், கடந்த 2014-இல் சேவல்கட்டு சண்டையின்போது சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்திப்பட்டு இருவா் இறந்ததையடுத்து பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த தடைவிதிக்கப்பட்டது. பிறகு, கடந்த 2019-இல் மீண்டும் சேவல் சண்டை நடத்துவதற்கு, சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

