சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஜனவரி 2021, 2:05 pm

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சு. சிவசண்முகராஜா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி முன்னிலை வகித்தாா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடா்பாக சிறப்பு முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், கோட்டாட்சியா்கள் குளித்தலை ஷே. ஷேக் அப்துல்ரகுமான், கரூா் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுலா் ஹஸ்ரத் பேகம், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.