சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுகவினரைக் கண்டித்து, கரூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :14 ஜனவரி 2021, 2:08 pm

திமுகவினரைக் கண்டித்து, கரூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய நகரச் செயலா் வை. நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்,இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நகரச் செயலா்கள் தெற்கு வி.சி.கே. ஜெயராஜ், வடக்கு எம். பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் தானேஷ், ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், முன்னாள் நகரப் பேரவைச் செயலா் செல்வராஜ் மத்திய நகரப் பேரவைச் செயலா் சேரன் எம்.பழனிசாமி, கருா் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.