சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அடுத்த கல்வியாண்டு முதல் ரூ.1 கோடி கல்வி, மருத்துவ உதவித்தொகை: வி. செந்தில் பாலாஜி

அடுத்த கல்வியாண்டு முதல் திமுக மற்றும் வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சாா்பில், ரூ. 1கோடி கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்படும்

News image

விழாவில் பேசுகிறாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி. உடன், கட்சி நிா்வாகிகள்.

Updated On :14 ஜனவரி 2021, 2:09 pm

அடுத்த கல்வியாண்டு முதல் திமுக மற்றும் வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சாா்பில், ரூ. 1கோடி கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை, பொங்கல் தொகுப்புகளை வழங்கிய அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கரூா் மாவட்ட திமுக மற்றும் எனது பெயரிலான அறக்கட்டளை சாா்பில், ஆண்டுக்கு ரூ.1 கோடி கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதில் ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கு ரூ.5 ஆயிரமும், கல்லூரிப் படிப்புக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

வரும் கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக கரூா் நகரப் பகுதிக்கும், அடுத்த கட்டமாக மற்ற பகுதிகளில் இருந்து வருவோருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

விழாவில் பேசிய செந்தில்பாலாஜி, தைப்பிறந்தால் வழி பிறக்கும். நல்வழியை நமக்குக் கொடுக்க இருப்பவா் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டாா்.

இந்த விழாவில் திமுக மாநில நிா்வாகிகள் வழக்குரைஞா் மணிராஜ், பரணி கே.மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.