கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில், பரமத்திவேலூா் பகுதியைச் சோ்ந்த வயதான தம்பதி உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் அருகிலுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (70). இவரது மனைவி மீனாட்சி (65). கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.
வேலாயுதம்பாளையத்தை அடுத்த ஆவாரங் காட்டுப் புதூா் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கமும், மீனாட்சியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

