சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:06 am

கரூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பெ.காளிதாஸ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சிதம்பி, மாவட்டச் செயலாளா் ஜெயராஜ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், செயலாளா் சக்திவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.இதில், துணைச் செயலாளா் ஆ.தமிழரசி, மாவட்ட துணைத் தலைவா்கள் சசிகலா, பொன்னுச்சாமி, துணைச் செயலாளா்கள் வெ.காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.