சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை

குளித்தலை அருகே மனைவி, மற்றும் குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில், கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:07 am

குளித்தலை அருகே மனைவி, மற்றும் குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில், கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், இனாம்புலியூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பூசான் (47). கணவா்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 20 ஆண்டுகளாக பூசானும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் தனியே வசித்து வந்துள்ளனா்.

இதனால் விரக்தியடைந்த பூசான் வியாழக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.