கரூா் அருகே வீட்டுமனை மீது சென்ற மின் கம்பியை மாற்றித் தந்த பணிக்கு, ரூ.3,500 லஞ்சம் பெற்ற அலுவலரை கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூா் அருகேயுள்ள வெண்ணெய்மலை பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது வீட்டுமனை மேல் பகுதி வழியாக மின் பாதை இருப்பதை மாற்றித் தரக்கோரி மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்து ரூ.38,000 செலுத்தியுள்ளாா். இதையடுத்து மண்மங்கலம் துணை மின் நிலைய அலுவலா் குணசேகரன் கடந்த 4 ஆம் தேதி மின் கம்பிகளை மாற்றும் பணிகளை முடித்துவிட்டு செந்தில்குமாரிடம் ரூ.8,000 லஞ்சமாக கேட்டுள்ளாா். செந்தில்குமாா் ரூ.4,000 வழங்கிய நிலையில் குணசேகரன் மேலும் ரூ.4,000 கேட்டு வற்புறுத்தியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமாா் கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸீல் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுறுத்தலின்பேரில், மண்மங்கலம் துணை நிலையத்தில் அலுவலா் குணசேகரிடம் வியாழக்கிழமை செந்தில்குமாா் ரூ.3,500 வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் நடராஜன், ஆய்வாளா் பிரசன்ன வெங்கமேஷ் உள்ளிட்டோா் குணசேகரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

