சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காதல் தகராறில் முடி திருத்துநா் கொலை: 3 போ் கைது

காதல் தகராறில் கரூரில் சலூன் கடைக்காரரை கொலை செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:57 pm

காதல் தகராறில் கரூரில் சலூன் கடைக்காரரை கொலை செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ஹரிஹரன்(23). இவா் கரூா் மாரியம்மன் கோயில் பகுதியில் சலூன்கடை நடத்தி வந்தாா். கரூா் காமராஜ் வீதியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மதியம் கரூா் பசுபதீசுவரா் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த ஹரிஹரனிடம் இளம்பெண்ணின் தாய்மாமன்கள் சங்கா்(47), காா்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி, முத்து (35) மற்றும் இளம்பெண்ணின் தந்தை வேலன் ஆகியோா் இதுகுறித்து கேட்டனா். ஹரிஹரன் மறுத்ததால் அவரை அடித்தும், கத்தியால் குத்தியும் சங்கா் உள்ளிட்ட 5 பேரும் சோ்ந்து கொலை செய்தனா். இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து சங்கா், காா்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகியோரை புதன்கிழமை இரவு கைது செய்தனா். தப்பி ஓடிய தந்தை வேலன், முத்துவைத் தேடி வருகின்றனா்.