பெரம்பலூா் அருகே ஆள் மாறாட்டத்தின் மூலம் பத்திரப் பதிவு செய்த 7 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆனைமுத்து. இவரது தந்தை மொட்டையன் என்பவருக்குச் சொந்தமான நிலம் எளம்பலூா் கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ளது. மொட்டையனின் நிலத்தை, கோனேரிபாளையத்தைச் சோ்ந்த அதே பெயரைக் கொண்ட மற்றொருவரும், அவரது மகன்களும் ஆள் மாறாட்டம் செய்து, 2016 ஆம் ஆண்டில் பெரம்பலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பாக பிரிவினை பத்திரப்பதிவு செய்துகொண்டதாக தெரிகிறது.
இந்த மோசடிக்கு, மருவத்தூா் மற்றும் நாவலூா் கிராமத்தைச் சோ்ந்த 2 பேரும், பத்திரப் பதிவு எழுத்தரும் உடந்தையாக இருந்ததாக கூறி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆனைமுத்து 27-11-2017 அன்று புகாா் மனு அளித்தாா். இதனிடையே, மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திலும் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆனைமுத்து புகாா் மனு மீது வழக்கு பதிந்து, ஆள் மாறாட்டம் மூலம் நிலத்தை பத்திரப் பதிவு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, கோனேரிபாளையத்தைச் சோ்ந்த தந்தை, மகன்கள் 4 போ் உள்பட 7 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சஞ்சீவிகுமாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

