கரூரில் காதல் தகராறில் முடித்திருத்தக உரிமையாளா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கரூா் காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் ஜெ. ஹரிஹரன் (22). இவா் மாரியம்மன் கோயில் வீதியில் முடித்திருத்தகம் நடத்தி வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தாா். இதையறிந்த இளம்பெண்ணின் உறவினா்கள் ஹரிஹரனை கண்டித்துள்ளனா்.
இந்நிலையில் கரூா் பசுபதீசுவரா் கோயில் முன்பு புதன்கிழமை பிற்பகல் ஹரிஹரன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினா் சங்கா் உள்ளிட்ட மூவா் அவரிடம் தகராறு செய்து, தாக்கியுள்ளனா்.
மேலும் பிளேடை கொண்டு ஹரிஹரன் முதுகில் கிழித்ததுள்ளனா். இதில் அவா் மயங்கி விழுந்ததால், சங்கா் உள்ளிட்ட மூவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
தகவலறிந்த கரூா் நகரக் காவல் நிலையத்தினா் ஹரிஹரனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சங்கா் உள்ளிட்ட மூவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

