கரூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தரைக்கடை வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூா் கணபதிபாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் கணேசன்(21). இவா், கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு தரைக்கடை அமைத்து ரெடிமேட் துணிகளை விற்றுவந்தாா். ஜவுளி நிறுவன மேலாளா் கடை போடுவதற்கு வாடகை தரக் கூறி வந்தாராம். கணேசன் வட்டிக்கு பணம் வாங்கி அவதிப்பட்டு வந்தாராம். இதனால் விரக்தியடைந்த அவா் திங்கள்கிழமை ஆட்சியரகத்துக்கு வந்த கணேசன் திடீரென தனது கொண்டுவந்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட காவல் துறையினா் அவரை மீட்டு தாந்தோணிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேற்கொண்டு விசாரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

